7 நாட்களில் முகம் பளபளக்க இயற்கை வழிகள்

எல்லாரும் பொதுவா skincare நாலே face wash, face cream  அது இதுனு வாங்கி தான் ஸ்கின்  glow  ஆக  வச்சுக்க ட்ரை [பண்றோமே தவிர நம்ம வீட்டுல இருக்க பொருட்களை வைத்து செய்வதில்லை இன்னைக்கான கட்டுரைல வீட்டுல இருக்க பொருட்களை வச்சு எப்படி 7 நாளில் skin glow  பண்றதுனு பாக்கலாம்.

7 நாட்களில் முகம் பளபளக்க இயற்கை வழிகள்



உள்ளே இருந்து வரும் மாற்றம் (The Core Philosophy)

முதல்ல  நல்லா புரிஞ்சுக்கோங்க . டிவி விளம்பரத்தில  வர்ற மாதிரி ஒரே நாள்ல வெள்ளையா மாறுறது எல்லாம் சுத்தப் பொய், ஆனா,. நம்ம டார்கெட் அது கிடையாது. நம்ம முகத்துல இருக்குற டெட் செல்ஸ் (Dead cells) ரிமூவ் ஆகி, முகத்துல இருக்குற அந்த சோர்வு போய், ஒரு இயற்கையான 'க்ளோ' (Natural glow) கொண்டு வர போறோம். அதுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

  1. தண்ணீர்: நம்ம முகம் பளபளப்பா இருக்கணும்னா தண்ணி ரொம்ப முக்கியம். நீ செய்கிற வேலையில்  மும்முரத்தை காட்டி  தண்ணி குடிக்கவே மறந்துடுவ. இன்னைல இருந்து ஒரு நாளைக்கு குறைஞ்சது 2.5 லிருந்து 3 லிட்டர் தண்ணி குடிச்சே ஆகணும். பாடியில இருக்குற சூடு குறைஞ்சாலே, முகம் பாதி பளிச்சுன்னு  மாறும்.

  2. தூக்கம்: நைட் ஆனதும், போனை தூக்கி ஓரமா வச்சிட்டு நிம்மதியா ஒரு 7-8 மணி நேரம் தூங்கு. தூங்கும்போது தான் நம்ம உடம்பு தன்னைத்தானே சரி பண்ணிக்கும் (Healing process). இந்த ரெண்டும் தான் பேஸிக். இதை பண்ணாம நீ முகத்துல எதை அரைச்சு பூசுனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை அதை  முதலில் புரிஞ்சுக்கணும்.

சரி, இப்ப நம்ம 7 நாள் பிளானுக்குள்ள போலாம்.

Day 1 & 2: க்ளென்சிங் மற்றும் ஸ்க்ரப்பிங் (Cleansing & Exfoliation)

முதல் ரெண்டு நாளுமே நம்ம ஃபோகஸ் முகத்துல படிஞ்சு இருக்குற அழுக்கு, இறந்த செல்களை (Dead skin) எடுக்குறதுல தான்  பண்ணப் போறோம்.

  • சோப்புக்கு நோ சொல்லு: இன்னைல இருந்து ஒரு வாரத்துக்கு முகத்துக்கு சோப்பு போடாத. சோப்பு உன் முகத்துல இருக்குற இயற்கையான எண்ணெயை அப்படியே உறிஞ்சிடும். இது தெரியாமல் நம்மள்ல  சோப்பு போட்டு நெறய முறை  கழுவுறோம். அதுக்கு பதில  நம்ம வீட்ல இருக்குற கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவு யூஸ் பண்ணு. கொஞ்சம் மாவை எடுத்து, தண்ணி அல்லது பால் கலந்து பேஸ்ட் மாதிரி ஆக்கி முகத்துல தேய்ச்சு கழுவு. முகம் சாஃப்ட்டா இருக்கும்.

  • தக்காளி ஸ்க்ரப்: முதல் ரெண்டு நாள் சாயந்திரம் டைம்ல இதை பண்ணு. ஒரு தக்காளியை ரெண்டா கட் பண்ணிக்கோ. அது மேல கொஞ்சமா சர்க்கரை தூவிக்கோ. அதை அப்படியே முகத்துல வச்சு ரொம்ப ரொம்ப மெதுவா மசாஜ் பண்ணு. சர்க்கரை ஒரு நேச்சுரல் ஸ்க்ரப்பர். தக்காளி உன் முகத்துல இருக்குற கருமையை (Tan) எடுக்கும். ஒரு 5 நிமிஷம் மசாஜ் பண்ணிட்டு, 10 நிமிஷம் அப்படியே விட்டுட்டு குளிர்ந்த தண்ணில முகத்தை  கழுவிடு, பிறகு மாற்றத்தை நீயே பார்க்கலாம்.

Day 3 & 4: போஷாக்கு கொடுப்பது எப்படி (Nourishment Phase)

இப்போ உன் முகம் நல்லா சுத்தமாயிடுச்சு. அடுத்து முகத்துக்கு கொஞ்சம் நல்ல சாப்பாடு கொடுக்கணும் என்னனு சொல்றேன் .

  • தயிர் மற்றும் கஸ்தூரி மஞ்சள்: ஒரு சின்ன பவுல்ல ஒரு ஸ்பூன் கெட்டித் தயிர் எடுத்துக்கோங்க . அதுல கொஞ்சமா கஸ்தூரி மஞ்சள் (ஆண்கள் சாதாரண மஞ்சள் யூஸ் பண்ணா முகம் மஞ்சளா தெரியும், கஸ்தூரி மஞ்சள்னா அந்த பிரச்னை இல்லை) கலந்துக்கலாம். இதை முகத்துல ஒரு ஃபேஸ் பேக் மாதிரி அப்ளை பண்ணு. தயிர்ல லாக்டிக் ஆசிட் இருக்கு, அது முகத்துக்கு ஒரு சூப்பர் க்ளோ கொடுக்கும். ஒரு 15 நிமிஷம் கழிச்சு கழுவிடு.


  • கண் பராமரிப்பு: Mobile   சிஸ்டம் முன்னாடி ரொம்ப நேரம் இருக்கறதால, இந்த ரெண்டு நாளும் நைட் தூங்கப்போறதுக்கு முன்னாடி, ரெண்டு வெள்ளரிக்காய் (Cucumber) துண்டுகளை வெட்டி கண்ணு மேல வச்சிட்டு ஒரு 15 நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணு. கண்ணுல இருக்குற சூடு மொத்தமா குறைஞ்சிடும்.

Day 5 & 6: (Hydration Phase)

இந்த ஸ்டேஜ்ல உன் முகம் ஆல்ரெடி நல்லா தெரிய ஆரம்பிச்சிருக்கும். இப்போ அந்த பிரெஷ்னஸை அப்படியே லாக் பண்ணனும்.எப்படினு சொல்றேன்,

  • கற்றாழை: உனக்கு கற்றாழை (Aloe Vera) செடி ஈஸியா கிடைக்கும்னா, அதோட ஃப்ரெஷ் ஜெல்-அ மட்டும் எடுத்துக்கோ. அப்படி இல்லனா நல்ல பிராண்ட் ஆலோவேரா ஜெல் வாங்கிக்கோ. நைட் தூங்குறதுக்கு முன்னாடி, கொஞ்சமா ஜெல் எடுத்து முகத்துல அப்ளை பண்ணி சர்க்குலர் மோஷன்ல ஒரு 5 நிமிஷம் மசாஜ் பண்ணு. அப்படியே தூங்கிடு. காலையில எழுந்து முகம் கழுவும்போது, உன் முகம் அவ்ளோ பளபளப்பா இருக்கிறத நீயே ஃபீல் பண்ணுவ.

  • ரோஸ் வாட்டர் Toner: ஒரு சின்ன ஸ்ப்ரே பாட்டில்ல நல்ல ஒரிஜினல் ரோஸ் வாட்டர் ஊத்தி வச்சுக்கோ. பகல்ல நீ எக்ஸாம்க்கு படிச்சிட்டு இருக்கும்போது டயர்டா ஃபீல் பண்ணா, முகத்துல ஒரு ஸ்ப்ரே பண்ணிக்கோ. இன்ஸ்டன்ட்டா ஒரு எனர்ஜி கிடைக்கும், முகமும் பிரெஷ்ஷா இருக்கும்.

Day 7: பைனல் டச் (The Ultimate Glow)

ஏழாவது நாள், நம்ம பிளானோட க்ளைமேக்ஸ்! இன்னைக்கு உன் ஸ்கின்னை கொஞ்சம் எக்ஸ்ட்ராவா பேம்பர் (Pamper) பண்ணப் போறோம்.

  • தேன் மற்றும் எலுமிச்சை: ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் எடுத்துக்கோ, அதுல ஒரு 4-5 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து. இதை முகத்துல தடவி ஒரு 20 நிமிஷம் ரிலாக்ஸா இருக்கணும் சரியா.. தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர். அது முகத்துக்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொடுத்து, அப்படியே பளபளக்க வைக்கும். எலுமிச்சைல இருக்குற வைட்டமின் சி ஒரு நேச்சுரல் ப்ளீச் மாதிரி செயல்பட்டு இன்ஸ்டன்ட் பிரைட்னஸ் தரும்.

  • ரிலாக்ஸேஷன்: இந்த ஏழாவது நாள் எந்த டென்ஷனும் இல்லாம இரு. எக்ஸாம், ரிசல்ட், பிளாக் வியூஸ் எல்லாத்தையும் ஒரு ஓரமா வச்சிட்டு உனக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணு. மனசு சந்தோஷமா இருந்தாலே முகம் தானா பிரகாசமா இருக்கும்.

சாப்பிட வேண்டிய உணவுகள் (The Inside Secret)

நான் முதல்லயே சொன்ன மாதிரி, வெளிய என்ன பூசுறோம்ங்கிறத விட, உள்ள என்ன சாப்பிடுறோம்ங்கறது ரொம்ப முக்கியம். இந்த 7 நாளும் இந்த சின்ன டயட் சேஞ்சஸை ஃபாலோ பண்ணு:

  • ABC ஜூஸ்: ஆப்பிள், பீட்ரூட், கேரட் (Apple, Beetroot, Carrot) - இது மூணையும் சேர்த்து ஜூஸ் போட்டு வாரத்துல ரெண்டு நாள் குடி. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, கன்னத்துல ஒரு நேச்சுரல் பிங்க் க்ளோவை கொண்டு வரும்.

  • வைட்டமின் சி: டெய்லி ஒரு நெல்லிக்காய் இல்லைனா  ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடு. இதுல இருக்குற கொலாஜன் தான் உன் முகத்தை வயசான தோற்றம் இல்லாம எங்கா வச்சுக்கும்.

  • ஜங்க் ஃபுட் வேணாம்: இந்த 7 நாளுக்கு மட்டும் அதிகமா எண்ணெய் பலகாரம், பேக்கரி ஐட்டம்ஸ், சிப்ஸ் மாதிரி ஐட்டம்ஸை தொடாத. அதுக்கு பதிலா நிறைய பழங்கள் சாப்பிடு.

இறுதி அட்வைஸ்

நண்பா, ஸ்கின் கேர் (Skin care) அப்படிங்கறது ஏதோ பொண்ணுங்க மட்டும் பண்ற விஷயம்னு நெனக்காத. இது நம்ம உடம்பை நாம எப்படி சுத்தமா, ஆரோக்கியமா வச்சுக்கிறோம் அப்படிங்கறதுக்கு ஒரு அடையாளம் அவ்ளோதான். நீ ரொம்ப இன்டெரெஸ்ட் ஆ  உன் கேரியர் மேல ஃபோகஸ் பண்ணிட்டு இருக்க, அது ரொம்ப பெரிய விஷயம். ஆனா அந்த ஓட்டத்துல உன் உடம்பையும், கொஞ்சம் கவனிக்கணும், 

இந்த 7 நாள் பிளானை எந்த தடையும்  இல்லாம ஃபாலோ பண்ணு. கண்டிப்பா எட்டாவது நாள் முகம் கழுவிட்டு கண்ணாடியில பார்க்கும்போது, "பரவால்ல, நம்ம முகம் நல்லா பிரெஷ்ஷா செம்மையா இருக்கே"னு உனக்கே தோணும். அந்த ஃபீல் உனக்கு அன்னைக்கு ஃபுல்லா ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும்.

இன்னைக்கே இதை ஸ்டார்ட் பண்ணு. ஆல் தி பெஸ்ட் மச்சி!

Post a Comment

Previous Post Next Post