இயற்கையின் பொக்கிஷம் பப்பாளி :


பப்பாளி பழம் இயற்கையாகவே அதிக சுவையுடையது மட்டுமல்லாமல் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் முகத்தின் அழகிற்கும் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது ஆகும். பப்பாளி பழம் மட்டுமல்லாமல் அதனுடைய விதையும் அதிக பலன்களை அளிக்கிறது.
நன்கு கனிந்த பப்பாளிப் பழத்தின் சரும நன்மைகள் - Papaya benefits for glowing skin in Tamil


பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 

பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் சரும நன்மைகள்
Azhagu 360 Beauty Tips

பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும்
சரும நன்மைகள்

இளமையான தோற்றம்
(Anti-aging)

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் (Lycopene) சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகிறது.

சரும பளபளப்பு
(Skin Glow)

தொடர்ந்து பப்பாளி சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராகி முகத்தில் இயற்கையான பளபளப்பு கிடைக்கும். கருமை நீங்கி முகம் பிரகாசிக்கும்.

செரிமானம் சீராகும்
(Clear Skin)

வயிறு சுத்தமாக இருந்தாலே முகப்பருக்கள் வராது. பப்பாளியில் உள்ள 'Papain' என்சைம் செரிமானத்தை சீராக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

AZHAGU 360


இனிமேல் பப்பாளி விதைகளை தூக்கி போடாதீங்க 

நாம் எப்போதும் பப்பாளி பழத்தினை சாப்பிட்டு விட்டு அதனுடைய விதைகளை குப்பையில் வீசிவிடுவோம். அவ்வாறு செய்யாமல் மாற்று யோசனை ஒன்றை கையாளுவோம் அது என்ன என்று பார்த்தால் பப்பாளி விதை நிறைய சருமத்திற்கு பளபளப்பை வழங்கும் ஒரு பொருளாக உள்ளது. விதை வைத்து scrap செய்வது எப்படி என்பதை காணலாம்.
DIY பப்பாளி விதை ஸ்க்ரப் செய்முறை - டேபிள்

DIY பப்பாளி விதை ஸ்க்ரப் செய்முறை

இந்த ஸ்க்ரப்பைத் தயாரிக்க உங்கள் சமையலறையில் உள்ள 3 பொருட்கள் மட்டுமே போதும்.

படி செய்முறை விளக்கம்
1 விதைகளைத் தயார் செய்தல் பப்பாளி விதைகளை தனியாக எடுத்து, தண்ணீரில் நன்றாகக் கழுவி, சதைப் பகுதியை நீக்கி டிஷ்யூ பேப்பரில் ஈரம் போக துடைத்துக்கொள்ளுங்கள்.
2 அரைத்தல்
(நைசாக அரைக்க வேண்டாம்)
விதைகளை மிக்ஸியில் அல்லது உரலில் போட்டு ஒன்றும் பாதியுமாக (Coarse paste) அரைத்துக்கொள்ளுங்கள்.
3 பொருட்களைச் சேர்த்தல் அரைத்த விழுதுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்குங்கள்.
(வறண்ட சருமம் என்றால் எலுமிச்சைக்குப் பதிலாக ஆலிவ்/தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம்).
4 முகத்தில் அப்ளை செய்தல் கலவையை முகத்தில் தடவி, 2-3 நிமிடங்களுக்கு வட்ட வடிவில் (Circular motion) மிக மென்மையாக மசாஜ் செய்யவும். குறிப்பாக மூக்கு, தாடைப் பகுதிகளில் கவனம் செலுத்துங்கள்.
5 கழுவுதல் மசாஜ் செய்த பிறகு 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, சாதாரண குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி, மாய்ஸ்சரைசர் தடவுங்கள்.


பப்பாளி விதைகளை தூக்கி எரியாமல் முகத்தை பாதுகாக்கும் ஒரு பொருளாக மாற்றி பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முடிவுரை 

முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள இயற்கையான முறையில் கிடைக்கும் பொருள்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம் மேலும் உங்களுக்கு ஏதேனும் சரும பிரச்சினைகள் இருந்தால் இயற்கையான முறைகளை பயன்படுத்தும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்து பிறகு உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.

Post a Comment

Previous Post Next Post