7 Days Glowing Skin Challenge 

இன்றைய காலகட்டத்தில் மாசடைந்த சுற்றுசூழல் மற்றும் மன அழுத்தம் காரணமாக நம்முடைய முகம் பொலிவை இழந்து கொண்டே வருகிறது. இன்றைக்கான கட்டுரையில் நம் முகத்தை 7 நாட்களில் இயற்கையாகவே எப்படி முகத்தை  பொலிவு பெற செய்வது பற்றி காண்போம். மேலும் ரசாயன பொருட்களை தவிர்த்து ஏன் இயற்கையான வழிமுறையை தேர்ந்தெடுத்தோம் என்பதையும் காணலாம்.
7 நாட்களில் முகம் பளபளக்க இயற்கை குறிப்புகள் - 7 Days Glowing Skin Tips in Tamil


7 நாட்களில் தவிர்க்க வேண்டியவை

அன்றாடம் நாம் செய்யும் செயல்களே முகம் பொலிவை இழக்க காரணமாக அமைகிறது அவற்றுள் சில :
  • தூக்கமின்மை: முகத்திற்கு மட்டுமல்ல உடலிலுள்ள நிறைய நோய்களுக்கும் தூக்கமின்மை முழு முதற்காரணமாக இருக்கிறது. இந்த 7 நாட்களில் நாம் 7 முதல் 8 மணி நேரம் துக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஓய்வை நாம் துக்கத்தின் மூலமே தர முடியும்.
  • சர்க்கரையை தவிர்த்தல்: மேலே கூறியது போல சர்க்கரையும் நல்ல உடல்நலத்திற்கு ஒரு எதிரியே. இந்த சர்க்கரை பயன்பாட்டை 7 நாட்களுமே  முழுவதுமாக குறைத்துவிட வேண்டும். சர்க்கரையை குறைப்பதன் மூலம் முகத்தில் மட்டுமல்ல உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் இந்த 7 நாட்களில் காணலாம்.
  • வெயிலில் அதிக நேரம் அலைவது: நாம் அன்றாடம் வேலைக்காக வெளியில் சென்று அலைந்து திரிவதுண்டு அவ்வாறு வெளியில் சென்று திரியும் பொது தூசி மாசுக்கள் முகத்தில் படிந்து கொள்ளும்.  ஆகையால் வெளியில் செல்லும் பொது Sun Screen அணிந்து செல்லுங்கள் இல்லையெனில் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பின் முகத்தை கழுவுங்கள். 
இவை மூன்று செயல்களை 7 நாட்கள் செய்து வர முகம் பொலிவு பெறும்.  மேலும் கைகளை அடிக்கடி முகத்தை தொடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  கையில் உள்ள தூசியை முகத்திற்கு கொண்டு செல்வதை தடுக்கலாம்.

7 Days Skincare Routines 

7 நாட்கள் பின்பற்ற வேண்டிய முகத்தை பராமரிக்க ஒருசிலவற்றை காண்போம்.
  1. இறந்த செல்களை நீக்குதல்: வாரம் இரண்டு தடவை தக்காளி சாறு அல்லது அரிசி மாவு கொண்டு முகத்தில் Scrap  செய்ய வேண்டும்.
  2. டோனிங் : முகத்தை டோனிங் செய்ய மற்றும் புத்துணர்ச்சி அளிக்க ஐஸ் கட்டிகள் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ் கொண்டு முகத்தில் தேய்க்க வேண்டும்.
  3. அலோவேரா ஜெல்:  கற்றாழை ஜெல் உடன் தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தில் தேய்த்து வரலாம்.
  4. இயற்கையான Face Packs  வறண்ட சருமத்திற்கு: தேன் + கற்றாழை. எண்ணெய் சருமத்திற்கு: முல்தானி மெட்டி + ரோஸ் வாட்டர். பருக்கள் உள்ள சருமத்திற்கு: வேப்பிலை
இவற்றை 7 நாட்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால் முகம் பொலிவு பெறும்.


Be  Hydrate 

நீர்ச்சத்து: தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது சருமத்திற்கு நல்லது.
பழங்கள் & காய்கறிகள் : கேரட், பீட்ரூட் சாறு மற்றும் வைட்டமின் C நிறைந்த பழங்களின் (ஆரஞ்சு, எலுமிச்சை) முக்கியத்துவம்.
சர்க்கரை அதிகமுள்ள இனிப்புகள் மற்றும் ஜங்குபுட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
என்ன என்ன சாப்பிடலாம் சாப்பிட கூடாது என்பதை அட்டவணையில் காணலாம் 
சாப்பிட வேண்டியவை (சருமத்தைப் பளபளப்பாக்க) தவிர்க்க வேண்டியவை (சருமப் பொலிவைக் கெடுப்பவை)
நீர்ச்சத்து: தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். சர்க்கரை: அதிக சர்க்கரை சேர்த்த இனிப்புகள், பேக்கரி உணவுகள் மற்றும் குளிர்பானங்கள்.
பழங்கள்: ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, தர்பூசணி (வைட்டமின் C நிறைந்தவை). எண்ணெய் உணவுகள்: டீப் ஃப்ரை செய்யப்பட்ட துரித உணவுகள் மற்றும் காரமான ஸ்நாக்ஸ்.
காய்கறிகள்: கேரட், பீட்ரூட், தக்காளி மற்றும் பச்சை கீரை வகைகள். பதப்படுத்தப்பட்டவை: பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ், நூடுல்ஸ் போன்ற உணவுகள்.
நட்ஸ் & விதைகள்: பாதாம், வால்நட், சியா விதைகள், ஆளிவிதைகள். காஃபின்: அதிகப்படியான காபி, டீ குடிப்பது சருமத்தை வறட்சியடையச் செய்யும்.
பானங்கள்: க்ரீன் டீ, சீரகத் தண்ணீர், இளநீர் மற்றும் மோர். அதிக உப்பு: ஊறகாய், அப்பளம் போன்ற அதிக உப்புள்ள உணவுகள் முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும்.


முடிவுரை 


இயற்கையான வழியில் சருமத்தை பராமரிப்பது எப்போதும் பாதுகாப்பானது மற்றும் நிரந்தரமான பலனை தரக்கூடியது.மேலும் விலையுயர்ந்த ரசாயன பொருட்களை தவிர்த்து வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து முகத்தை பொலிவாக்க முடியும். இந்த வழிமுறைகளை 7 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துவது மூலம் மட்டுமே முகம் பளபளப்பாகும். ஒரே இரவில் மேஜிக்  நடந்துவிடாது என்பதை புரிந்து கொண்டு செயல் பட வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post