முன்னுரை - புரதத்தின் அவசியம்
நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும் தசை வளர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் சரும பாதுகாப்பிற்கும் புரதம் அவசியமாகிறது.நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் புரதத்தால் கட்டமைக்கப்பட்டவை. ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், திசுக்களை சரிசெய்யவும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது அன்றாட உணவில் புரதம் சேர்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து சரிவிகித உணவை உன்ன வேண்டும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை?
ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை?
சராசரி மனிதனுக்கு
உடல் எடையில் 1 கிலோவிற்கு
0.8g - 1g
உடற்பயிற்சி செய்வோருக்கு
உடல் எடையில் 1 கிலோவிற்கு
1.5g - 2g
💡 உதாரணம்: உங்கள் எடை 60 கிலோ என்றால்
ஒரு நாளைக்கு 48g முதல் 60g வரை புரதம் தேவை!
⚠️ புரதச்சத்து குறைபாட்டின் விளைவுகள்:
- அடிக்கடி ஏற்படும் உடல் சோர்வு
- அதிகப்படியான முடி உதிர்தல்
- சரும வறட்சி மற்றும் பொலிவின்மை
🍲 தினமும் உங்கள் உணவில் புரதம் இருப்பதை உறுதி செய்யுங்கள்!
புரதத்தின் தேவை மற்றும் குறைபாட்டினால் வரும் விளைவுகளை பார்த்தோம். இப்போது எந்த எந்த உணவில் புரதம் அதிகம் உள்ளது என்பதை சைவம் அசைவம் என பிரித்து வகைப்படுத்தலாம்.
புரதம் அதிகமுள்ள உணவுகள்
🌱 சைவ உணவுப்பொருட்கள் (Vegetarian Protein Foods)
சோயா அல்லது மீல் மேக்கர்
(Soya Chunks)
|
சைவ உணவிலேயே அதிக புரதம் கொண்ட ஒரே உணவு பொருள் சோயா ஆகும். இதனுள் 100 கிராமுக்கு 50 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்துள்ளது. மேலும் இது முற்றிலும் சைவ உணவு என்பதால், சைவ உணவு விரும்புவோர்க்கு ஒரு சிறந்த வரப்பிரசாதமாக அமைகிறது.
|
பனீர்
(Paneer)
|
பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பனீர், புரதம் நிறைந்த உணவாக மட்டுமில்லாமல் கால்சியம் நிறைந்த உணவாகவும் உள்ளது. தசைக்கு வலு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் எலும்பிற்கு அதிக வலு சேர்க்கும் முக்கிய உணவாக இது பார்க்கப்படுகிறது.
|
நட்ஸ் மற்றும் சீட்ஸ்
(Nuts & Seeds)
|
பாதாம், வால்நட், வேர்க்கடலை, சியா விதைகள் போன்றவைகளில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பும் (Healthy Fats) நிறைந்துள்ளன. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் சோர்விலிருந்து எளிதாக விடுபடலாம்.
|
🍗 அசைவ உணவுப்பொருட்கள் (Non-Vegetarian Protein Foods)
முட்டை
(Egg)
|
முட்டை ஒரு புரதம் நிறைந்த உணவு பொருட்களுள் முதன்மையான ஒன்று ஆகும். தினமும் 1 அல்லது 2 முட்டைகளை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு பலம் சேர்க்கும். ஏனெனில் இதில் உடலுக்கு தேவையான அணைத்து அமினோ அமிலங்களும் (Amino Acids) அடங்கியுள்ளது.
|
கோழி மார்பகக் கறி
(Chicken Breast)
|
இதில் கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் நிறைந்துள்ளதால் பொதுவாக உடற்பயிற்சி நிலையம் (Gym) செல்லும் அனைவரும் தேர்ந்தெடுக்கும் முக்கிய உணவு பொருளாக இது பார்க்கப்படுகிறது.
|
மீன் வகைகள்
(Fish)
|
மீன்களில் பொதுவாக புரதம் மற்றும் ஒமேகா-3 [Omega-3] கொழுப்பு அமிலங்களும் உள்ளதால் இவை இதய ஆரோக்கியத்திற்கும், கண் பார்வைக்கும், மேலும் சீரான ரத்த ஓட்டத்திற்கும் பெரிதும் பயனளிக்கின்றன.
|
முடிவுரை
புரதம் என்பதை மனமது உடலுக்கு ஆற்றல் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. பொதுவாக உடற்பயிற்சி நிலையம் செல்பவர்களே அதிக புரதம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதல்ல நாம் அனைவரும் புரதம் நிறைந்த உணவை நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Post a Comment