Introduction: நெல்லிக்காய்
![]() |
நெல்லிக்காய் (Phyllanthus emblica) ஒரு மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருள் என்பதை நாம் அறிவோம் தானே? உங்களுக்கு அதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த கட்டுரையில் அதை பற்றி முழுமையாக காண்போம். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டர் தேவையில்லை என்பது பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் ஒரு நெல்லிக்காய் பல ஆப்பிள்களுக்கு சமம் என்பதை கேட்டிருக்க மாட்டோம். ஆம், ஒரு நெல்லிக்காய் பல ஆப்பிள் சாப்பிடுவதற்கு சமம்.
ஊட்டச்சத்து நிறைந்த நெல்லிக்காய்
நமது உள்ளங்கையில் அளவில் சிறியதாக இருக்கும் இவற்றுள் ஊட்டச்சத்துகள் நிறைய உள்ளது. இதுனுள் வைட்டமின் C அதிகமாகவே உள்ளது ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் C அளவை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் இதனுள் வைட்டமின் A அடங்கியுள்ளது. இது நமது கண்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. மேலும் இதனுள் கால்சியம், பாஸ்பரஸ்,இரும்புசத்து போன்ற அத்தியாவசிய தாது பொருட்களும் உள்ளடங்கியுள்ளது. நெல்லிக்காயில் உடம்பிலுள்ள நச்சு பொருட்களை நீக்கும் சக்தி வாய்ந்த [Antioxidants] நிறைந்துள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி செல்களை பாதுகாக்கிறது. நெல்லிக்காயில் குறைவான கலோரியும் அதிக பைபர் Fibre நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு மிகவும் உதவும்.இத்தனை நல்ல குணங்களை உள்ளடக்கிய நெல்லிக்காயை உலகெங்கும் உள்ள வல்லுநர்கள் Superfood என்று அழைக்கிறார்கள்.
நெல்லிக்காயின் பூர்வீகம்
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காயின் பூர்வீகம் இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவி காணப்பட்டது. தமிழ் வரலாற்றில் நெல்லிக்கனிக்கு ஒரு அழகிய மற்றும் அழியாத இடமுண்டு. அரியவகை நீண்ட ஆயுளை தரும் கருநெல்லிக்கனியை தான் உண்ணாமல் தமிழ் மொழி தழைத்து ஓங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக .ஒளவையாருக்கு பரிசளித்த அதியமான் பற்றி சங்க இலக்கியமான புறநானூறு போற்றுகின்றது. நெல்லிக்கனியின் சிறப்புகளை அன்றே அறிந்து இருந்தவர்கள் தமிழர்கள் என்பதை இது உணர்த்துகிறது.
நெல்லிக்காய் வாங்க : Buy Fresh Amla
அன்றாட உணவில் நெல்லிக்காயை எப்படி சேர்த்துக்கொள்வது?
நம்மில் பெரும்பாலானோர் ஏதேனும் மருத்துவ பயனுக்காக மட்டுமே அவ்வப்போது பயன்படுத்துகிறோம். கசப்பான மருந்து போல இதனை நினைக்காமல் அன்றாடம் உணவில் சேர்த்து இதனுடைய தனித்துவத்தை ருசிக்கலாம்.
- பச்சையாக சாப்பிடலாம்; சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகுதூள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான நொறுக்குதீனியாக சாப்பிடலாம். மாலை நேரங்களில் தினசரி சாப்பிட்டு வரலாம்
- காலையில் ஜூஸ் செய்து பருகலாம்: காலையில் நெல்லிக்காய் சாறு செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க உடம்பிலுள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
- சமையலில் : சமையல் செய்யும் போது புளிப்பு சுவைக்காக புளி பயன்படுத்துவற்கு பதிலாக நெல்லிக்காயை பயன்படுத்தி ரசம் வைக்கலாம்.
நெல்லிக்காயின் மருத்துவ பலன்கள்
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நமது உடலில் பல மாற்றங்கள் உண்டாகும்.அவற்றுள் சில மருத்துவ பலன்கள்;
- நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்: நெல்லிக்காயில் குரோமியம் எனும் தாது பொருள் அடங்கியுள்ளது, இது கணையத்தில் இன்சுலின் சுரப்பியை தூண்டி இயல்பான இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. [குறிப்பு: ஏதேனும் நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள், நெல்லிக்காயைத் தினமும் உணவில் சேர்க்கும் முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.]
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: நெல்லிக்காயில் வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நிறைந்துள்ளதால் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது. இதனால் அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்
- செரிமானம் மற்றும் கண்பார்வை: இதில் நார்ச்சத்து [Fibre] அதிகம் நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை நீக்கும். மேலும் வைட்டமின் A உள்ளதால் கண் பார்வையை தெளிவுபடுத்த்தும்.
- கூந்தல் வளர்ச்சி: கூந்தல் வளர்ச்சி மட்டும் பராமரிப்பிற்கு நெல்லிக்காய்க்கு நிகர் வேறில்லை. இது முடிகொட்டுவதை நிறுத்துவதோடு, இளநரை பிரச்சனையை தீர்த்து கருமையான முடி வளருவதற்கு உதவுகிறது.
முடிவுரை
இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம் இந்த நெல்லிக்காய். இதனுள் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை அறிந்து தினமும் நமது உணவில் நெல்லிக்காயை சேர்ப்பது மிகவும் நன்று.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.ஆரோக்கியமான நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி?
தேவையானவை: 2 பெரிய நெல்லிக்காய் (விதை இலலாமல்), 1/2 ஸ்பூன் சீரகத் தூள், ஒரு சிட்டிகை இந்துப்பு (Black salt),சிறிய இஞ்சித் துண்டு, 1 ஸ்பூன் தேன்.
செய்முறை : நறுக்கின நெல்லியக்காயையும் இஞ்சியையும் சேர்த்து Mixie அரைத்து எடுத்துக்கொள்ளவும், பின்னர் அதை வடிகட்டி ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொண்டு அதனுடன் சீரகத் தூள் மற்றும் தென் கலந்து குடிக்கலாம்.
2. தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி?
தேவைப்படுபவை :10 பெரிய நெல்லிக்காய்கள், சுத்தமான தேன் (நெல்லிக்காய் மூழ்கும் அளவு).
செய்முறை: நெல்லிக்காயை Fork வைத்து ஆங்காங்கே துளைகள் போட்டு அதை அப்படியே இட்லி பானையில் வேக வைக்கணும், ரொம்ப நேரம் வைக்க கூடாது. பின்னர் அதை நன்கு உலர வைத்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு அவை மூழ்கும் வரை தேன் ஊற்ற வேண்டும். அதனை 3 நாட்கள் ஊற வைத்து பின்னர் ருசிக்கலாம். குழந்தைகளை நெல்லிக்காய் சாப்பிட வைக்க இது ஒரு நல்ல முறை.

Post a Comment